உலகின் முன்னணிக் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வட்ஸ்அப் , புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதுடன், பழைய சாதனங்களில் அதன் சேவையை நிறுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கு முந்தைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளிலும், ஜனவரி 1, 2025 முதல் வட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பச் சேவைகளைப் பயனர்களுக்கு வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு வெளியான கிட்கேட் ஓ.எஸ். மிகவும் பழையது என்பதால், வட்ஸ்அப்பின் புதிய அம்சங்களை அதில் வழங்குவது சிக்கலாக இருக்கும். மேலும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை அவசியமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், எந்த தொலைபேசி வகைகளில் சேவை நிறுத்தம் அமலாகும் என்பது தொடர்பான முழுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
வட்ஸ்அப் இந் நடவடிக்கையைச் செயலியின் பாதுகாப்பையும், செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇