சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷானன் கெப்ரியல் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர், 59 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் 25 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இரண்டு 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஷானன் கெப்ரியல், இதுவரை காலமும் தமக்கு ஆதரவு வழங்கிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇