கொழும்பு துறைமுகத்தில் 12,000 மெற்றிக் தொன் அரிசி தரையிறக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய , தனியார்த் துறையினரால் 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் , 43,000 நாடு அரிசியும் அடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇