ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கென JICA நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடன் மறுசீரமைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்தல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பில் கலந்துரையாடலின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு ஜப்பான் பெற்றுக்கொடுக்கும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது நன்றியைத் தெரிவித்ததுடன் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் “Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் ஜப்பானின் தூதுவர் Akio Isomata மற்றும் ஜப்பான் தூதரக அலுவலகத்தின் பிரதம செயலாளர் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிரதானி Kenji Ohashi ஆகியோர் கலந்துகொண்டதுடன், இலங்கை தூதுக் குழுவில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கான மேலதிக செயலாளர் யசோஜா கே குணசேகர, குறித்த அமைச்சின் கிழக்காசியாவிற்கான உதவிப் பணிப்பாளர் ரவீன் உபேசேகர மற்றும் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇