சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு அனுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு , நாளை (04.02.2025) அவர்களின் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை கைதியொருவருக்கு போதுமான அளவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய, கைதிகளை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects