மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக 08.02.2024 அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் S.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.
இதனால் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நீர்ப்பாவனையாளர்களிற்கு நீர் வழங்குதல் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே வழங்கப்படும் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து தங்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










