உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை அந்தந்த வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் வழங்கும் நடவடிக்கையை இவ்வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 17.02.2025 அன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது அது இன்று ஆணைக்குழுவுக்கு கிடைக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க கூறினார்.
அதன் பின்னர் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக இந் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக 80,000 மேற்பட்ட வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கமைய நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
இதனிடையே 2023 ஆம் ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகளை அழிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










