வவுனியா தவிர்ந்த ஏனைய நகரங்களில் மிதமான நிலையில் காற்றின் தரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் வவுனியாவில் மட்டும் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் பெரும்பாலான நகரங்களில் 24.02.2025 அன்று காற்றின் தரம் மிதமான நிலையிலும், வவுனியாவில் மட்டும் நல்ல நிலையிலும் காணப்பட்டது.

காற்றின் தரம் 40 தொடக்கம் 78க்கு இடையில் இன்று (25.02.2025) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையிலும், வவுனியாவில் நல்ல நிலையிலும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானதாக இருக்கும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects