வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வடக்கு மாகாண மகளிர் விவகாரம் , புனர்வாழ்வளித்தல் , சமூக சேவைகள் , கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இக் கொள்கை வரைபை முன்வைத்து அது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.02.2025 அன்று இடம்பெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களினதும் செயலாளர்கள் ஆகியோரும், இந்த வரைவு ஆவணத்தை உருவாக்கிய நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் ஐ.எல்.ஓ. நிறுவனப் பிரதிநிதிகளும் இக் கலந்துரையாடலில் நேரடியாகப் பங்கேற்றதுடன், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர் சார்பான பிரதிநிதிகள் ‘சூம்’ வழியாக இணைந்து கொண்டனர்.

இந்த வரைவு ஆவணம் இறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects