காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் 25.02.2025 அன்று பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .
இக்கூட்டத்திற்கு கணக்காய்வு அத்தியட்சகர் ரொபர்ட் அலோசியஸ், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் மற்றும் கணக்காய்வு திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கணக்காளரினால் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள், கணக்காய்வு பற்றிய விடயங்களின் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு, கணக்குக் கிளை, நிருவாக கிளை, பதிவாளர் கிளை, நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு, சமுர்த்தி கிளை மற்றும் சமுர்த்தி வங்கிகள், Passport & NIC, சிறுவர் பெண்கள் பிரிவு ஆகிய பிரிவுகளின் முன்னேற்ற அறிக்கை விளக்க காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.
Investigation முறைப்பாட்டின் படி அலுவலக ரீதியான சில பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்வதற்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது.
மேலும் கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரினால் அலுவலக கடமைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உதவியாளர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










