இன்று நாட்டை வந்தடையவுள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின், ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இன்று (27.02.2025) இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் முதல் தொகுதி 26.02.2025 அன்று தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தனிநபர் பாவனைக்காக விற்பனை செய்யப்படவுள்ள குறித்த வாகனங்கள் 26.02.2025 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

மேலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டபள்கெப் ரக வாகனங்கள் உள்நாட்டுச் சந்தையில் 24.5 மில்லியன் ரூபாய் முதல் 25.5 மில்லியன் ரூபாய் வரையிலான விலைகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் 4000 வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிங்சிகே தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects