2025 இல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி 28.02.2025 அன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

27.02.2025 அன்று விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் 28.02.2025 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மார்ச் 28 ஆம் திகதி இரவு 10.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் நேரில் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects