உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20.03.2025) நிறைவடைகின்றன.
அதன் பிரகாரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பின்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையும் 19.03.2025 அன்றுடன் நிறைவடைந்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










