2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை (01.04.2025) முதல் ஆரம்பிக்கவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், 1,066 மத்திய நிலையங்களில் இந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் நாளை (01.04.2025) முதல் 10.04.2025 அன்று வரை நடைபெறவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு மதிப்பீட்டுப் பணிகளுக்காக நாடு முழுவதிலும் 16,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










