மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் மற்றும் வாண்மைவிருத்தி செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் வாண்மைவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் 28.03.2025 அன்று இடம் பெற்றது.

மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு பிரேந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை என்பன இணைந்து முன்பிள்ளைப்பருவ அபிவிருத்த்க்ஹ்ய மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரனின் ஓர்ப்பிருங்கிணைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் R.முரளீஸ்வரனின் ஆலோசனையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு நடாத்தப்பட்டது.

செயலமர்வில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் பெற்றோர் ஆசிரியர்களுக்கிடையிலான வினைத்திறனான தொடர்பாடல் பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றம் அதனை கையாள்வதற்கான செயன்முறை விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

வளவாளராக உளநல வைத்தியரும் சர்வதேச நடத்தை மாற்று வைத்திய அதிகாரியுமான சகாயதர்ஷினிஜூடி ஜெயக்குமார் கலந்து கொண்டார். வலயக் கல்வி அலுவலக முன்பள்ளி அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன், மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் சுபாநந்தினி உதயகாந்தன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் 563 முன்பள்ளிகள் இயங்கி வருகின்ற நிலையில் ஆரம்பக்கட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 71 முன்பள்ளிகளைச்சேர்ந்த ஆசிரியர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றினர்.


இதன் போது முன்பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளின் போது எவ்வகையான உளவியல் முறைகளை பயன்படுத்த வேண்டும், பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை அவதானித்தல், தொடர்பாடல் மற்றும் உளநல ஆற்றுப்படுத்தல் போன்ற பல உளவியல் சார் நுட்பங்கள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects