உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 03.04.2025 அன்று இடம் பெற்றது.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல் இதன் போது வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கென்னும் நிலையங்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…