ஓட்டிசம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் 02.04.2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஓட்டிசம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…