நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மத்திய மலைநாட்டில் தற்போது ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 400 முதல் 420 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி வகைகள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளதாக பாவனையாளர் கூறுகின்றனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇