மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது தொடர்ச்சியாக இவ்வருடமும் 8 ஆவது முறையாக ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வானது 21.04.2025 அன்று மு.ப 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை பிரதேச செயலாளர் உ.உதயஶ்ரீதரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என 81 பேர் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரத்த கொடையாளர்களுக்கான சிற்றுண்டிகளை LIFT நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










