மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள Shane பாலர் பாடசாலையில் வெசாக்தினம் முன்பள்ளியின் அதிபர் டிலினி குஷாந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார மேம்பாட்டு முன் பள்ளியை கட்டி எழுப்புவதற்கான செயல்பாட்டில், பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன்பள்ளி மாணவர்களின் பங்குபற்றுதலுடன் சமய விழாக்களை நடத்துதல் என்னும் தொனிப் பொருளில் இத் தினம் சிறப்பிக்கப்பட்டது.
வெசாக் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து பொது மக்களுக்கு பால் சோறு, குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி வைத்ததுடன் முன்பள்ளி பிள்ளைகளின் விருத்தி செயற்பாடாக, அலரிப் பூ கோருத்தல், வர்ணக் கடதாசியில் வெசாக் கூடு செய்தல் போன்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர்களும் வெசாக் தினத்தை பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள். பிள்ளைகளும் ஆசிரியர்களும் வெண்ணிற ஆடைகள் அணிந்து எமது சகோதர இனத்தின் வெசாக்தினத்தை நல்லிணக்க செயற்பாடாக முன் பள்ளியில் செயல்படுத்தினர்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










