மட்டக்களப்பு கொம்மாதுறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந் நிகழ்வு மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் அனுசரணையுடன், சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி.இன்பராசா தலைமையில் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் 17.05.2025 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டு மாநகரசபை ஆணையாளர் நா.தனஞ்சயன் கலந்துகொண்டார். மேலும், செங்கலடி மத்திய மகா வித்தியாலய அதிபர் க.சிவயேஸ்வரன், கல்குடா ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிரஞ்சன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது, கிஷன்ராஜ் தன்யஸ்ரீ 195 நாடுகளின் தலைநகரப் பெயர்களை மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமாகக் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இச் சாதனையைப் புரிந்த குழந்தைக்கு பதக்கங்கள், வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அதிதிகள் கௌரவித்தனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










