நுவரெலியா கிரெகெரி வாவிக்கு அருகில் மரங்கள் முறிந்து விழுந்ததால், நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் வாகனம் செலுத்தும் போது சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









