மீண்டும் ஒரு மாத காலத்திற்கு இடை நிறுத்தப்படும் வடக்கு புகையிரத சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு புகையிரத சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

இத் திருத்தப் பணிகளை பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9,127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட போதிலும், சமிக்ஞை கட்டமைப்பின் கட்டுமானம் தாமதமாகி வருகிறது. சமிக்ஞைகள் இல்லாததால், தற்போது அப் பகுதியில் டோக்கன் முறையில் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் , இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் சமிக்ஞை கட்டமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பணிகளை முடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects