மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள Shane பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தினம் முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி குஷாந்த் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திருச்செல்வம் மேகராஜ், ஏனைய பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் .

நிகழ்வில் சுற்றாடல் தினத்தை பற்றிய விழிப்புணர்வு பேச்சுக்களும், பிள்ளைகளுக்கான சுற்றாடல் தொடர்பான கதைகளும், சிறுவர் ஆக்கங்களும் இடம்பெற்றன.

பாலகர்களினால் சுற்றாடல் தினத்தையொட்டி மாமரக்கன்று அதிதிகளுடன் இணைந்து நடப்பட்டது.

நிகழ்வின் ஒரு அங்கமாக பிரதேச செயலகத்தின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்த திரு. திருச்செல்வம் மேகராஜ்சின் வழிகாட்டலின் கீழ் முன்பள்ளி பிள்ளைகள் நெகிழி குப்பைகளை சேகரித்து பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களிடம் கையளித்தார்கள்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects