நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப் பகுதியில் இன்று (03.06.2025) அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.
மண்சரிவு ஏற்படும் அபாயத்தின் காரணமாகக் குறித்த வீதியின் நானுஓயா பிரதேசத்தில் 300 மீட்டர் அளவிலான பகுதி போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நுவரெலியா பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இந்த மண்மேடு சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










