2026 டி20 உலகக்கிண்ணம் பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 (T20) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி,பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் இப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பெப்ரவரி 7ஆம் திகதி உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அணிகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்தப் போட்டிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் உத்தியோகபூர்வ பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டாது. ஏனெனில், அதே காலப்பகுதியில் இவ்விரு நாடுகளும் ஒரு இருதரப்புத் தொடரில் விளையாடவுள்ளன. இருப்பினும், இலங்கையின் ‘பயிற்சி அணி’ சில பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிகள் கொழும்பு , பெங்களூர், சென்னை மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.

பயிற்சிப் போட்டிகளின் அட்டவணை பின்வருமாறு :-


பெப்ரவரி 2ஆம் திகதி

ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து – பெங்களூரு

இந்தியா ‘ஏ’அணி மற்றும் அமெரிக்கா – நவி மும்பை

கனடா மற்றும் இத்தாலி – சென்னை

பெப்ரவரி 3 ஆம் திகதி

இலங்கை ‘ஏ’அணி மற்றும் ஓமான் – கொழும்பு

நெதர்லாந்து மற்றும் சிம்பாப்வே – கொழும்பு

நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் – சென்னை

பெப்ரவரி 4ஆம் திகதி

நமீபியா மற்றும் ஸ்கொட்லாந்து – பெங்களூரு

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் – பெங்களூரு

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் – கொழும்பு

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா – நவி மும்பை

பெப்ரவரி 5ஆம் திகதி

ஒமான் மற்றும் ஜிம்பாப்வே – கொழும்பு

கனடா மற்றும் நேபாளம் – சென்னை

நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா – நவி மும்பை

பெப்ரவரி 6ஆம் திகதி

இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் – சென்னை

இந்தியா ‘ஏ’அணி மற்றும் நமீபியா – பெங்களூரு

20 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கிண்ணத் தொடர் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே விளையாடவுள்ளதுடன், இந்திய-பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகளின் போது பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறையினர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects