சமாதான நீதவான் நியமனம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டளை இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும், முழு நாட்டுக்குமான சமாதான நீதவான் நியமிக்கப்படும் போது, 5 ஆண்டுகளுக்குக் குறையாத காலம் நிர்வாக மாவட்ட சமாதான நீதவானாக செயற்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டளை திருத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் சித்திபெற்றவராக இருக்க வேண்டும் என்ற கட்டளையும் இணைக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects