நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜேர்மனி ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜேர்மனிக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரம், ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects