கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார்.
100ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இப் பல்கலைக்கழகத்தில், முதல் தடவையாக பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்றுள்ள குசானி, அதற்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், தனது கனேடிய கற்கைநெறி பட்டம் குறித்து குசானி சந்தகிரி தெரிவிக்கையில்,
முன்னதாக, இலங்கையில் வேதியியல் பொறியியலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்டேன். பின்பு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும் பணி செய்தேன்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெற்ற அனுபவமே என்ன கனேடிய கற்கைக்கு வழிவகுத்ததாக குசானி குறிப்பிட்டுள்ளார்.
நான் கனடாவில் படித்துக்கொண்டே, இலங்கையிலுள்ள எனது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதற்காக தொழில் ஒன்றிலும் ஈடுபட்டு வந்தேன். அதன்படி, கனடாவில் எரிவாயு துறையில் தொடர்ந்து பணியாற்றவுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










