எதிர்வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காலத்தை முன்னிட்டு வாரத்தில் ஒருநாள் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுகளில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் குறித்த பிரதேச செயலக வளாகம் துப்பரவு செய்யப்பட்டது.
இச்சிரமதான நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇