கொழும்பு நகரப் பகுதிகளுக்களில் டெங்கு பெருகும் இடங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க 011 2696594 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இத் திட்டத்திற்காக 60 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டில் கொழும்பு மாநகர சபைக்குள் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2,576 ஆகும்.
இதே வேளை, 03.07.2025 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 6,370 நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










