கிழக்கு மாகாண ஆளுநாின் ஆலோசனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடா்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி கடற்கரையினை சிரமதானம் செய்யும் நிகழ்வு 08.07.2025 அன்று மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்ண சேகர கலந்து கொண்டு சிரமதான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மாகாண சபை அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், இாணுவ அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










