அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பொன்றை எட்டியுள்ளன.இது, உலகின் இரண்டு பெரிய பொருளாதார பங்காளிகளுக்கிடையே பல மாதங்களாக நீடித்து வந்த முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருக்கு இடையே ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கும் 15வீத அமெரிக்க வரியை விதிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
அத்துடன்,(27) உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு வரியற்ற சந்தையைத் திறக்கும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், உலக வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, இங்கிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுடன் டொனால்ட் ட்ரம்ப் வரி ஒப்பந்தங்களைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










