குருநாகல் – மஹோ மற்றும் அநுராதபுர புகையிரத மார்க்கத்தில் மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசு, முதல் தவணைக்கான நிதியை விடுவித்துள்ளது.
அதன்படி, இலங்கை ரூபாவில் 770 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
முன்னதாக, இந்த திட்டம் சலுகை கடன் திட்டமாக அறிவிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, இந்த திட்டம் மானிய திட்டமாக மாற்றப்பட்டது.
அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவும் பணிகளை, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய உதவியுடன், வடக்கு தொடருந்து மார்க்கத்திலுள்ள தண்டவாளங்கள், மணித்தியாலத்துக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்து பயணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹவ – அநுராதபுரம் ரயில் மார்க்கத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கத்தால் முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 770 மில்லியன் ரூபாய்) விடுவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துரையாடி ஆரம்பிக்கப்பட்டது.
மேலும், திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது.
இந்திய அரச நிறுவனமான ஐஆர்சிஓஎன் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON International Limited) மூலம் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய உதவியுடன், வடக்கு மாகாண புகையிரத மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் pukaiyiratha இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், புகையிரத சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத் திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஒகஸ்ட் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதுவரை, இந்தியா சுமார் 500 கி.மீ புகையிரத மார்க்கத்தை மறுசீரமைத்து மேம்படுத்தியுள்ளதுடன், சுமார் 330 கி.மீ புகையிரத வலையமைப்பில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவியுள்ளது.
இதன் மூலம் வடக்கு-தெற்கு இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இந்தியா பரந்த அளவிலான இயந்திரங்கள், டீசல் மல்டிபிள் யூனிட்கள் (DMUகள்), மற்றும் பயணிகள் பெட்டிகளை வழங்கியுள்ளது. இது இலங்கை புகையிரதத்தின் செயல்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்துகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










