இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் 1.7 பில்லியன் டொலர் எனவும் தெரியவந்துள்ளது.
2025 இல் இதுவரையில், இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் கடந்த 6 மாதங்களில் அரசாங்கம் 3.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுகுறித்து ஆராயும் விதமாக FactSeeker, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் மாதாந்த அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, இந்த ஆண்டு ஜூன் மாதம்வரை 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் 1.7 பில்லியன் டொலர் என்பதும் தெரியவந்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










