2025 ஆம் ஆண்டுக்கான தரட் ம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 10.08.2025 அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நிலையில், இப் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் 10.08.2025 அன்றைய தினம் நடைபெற்றதுடன், அதில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர்.
இந்த நிலையில், பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்தாண்டு (2025) நவம்பர் மாதம்10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் அறிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










