அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை இன்று (01.09.2025) முதல் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம், இந்த திட்டம் “செயிரி வாரம்” என பெயரிடப்பட்டு இன்று (01.09.2025) முதல் 4 நாட்களுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், மாவட்டச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் காண்பது மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுவது ஆகியன இதன் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










