“உலகை அறிவோம் – விவாத மேடை” போட்டி நிகழ்வு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் “உலகை அறிவோம் – விவாத மேடை” போட்டி நிகழ்வு 27.08.2025 அன்று பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சி. உருத்திரராஜா மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த விவாத போட்டி நிகழ்வில் “இலங்கையின் கலாசாரம் ஏற்புடையது மற்றும் ஏற்புடையதல்ல ” எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

குறித்த விவாத போட்டி நிகழ்வு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ் விவாத போட்டி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், உதவி அதிபர் சு. புவிச்சந்திரன், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுகளை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்திருந்ததுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects