மட்டக்களப்பில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி வைத்திய கலாநிதி ஜி சுகுணன் தலையில் 14.11.2023 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபவனி இடம் பெற்றது.
இவ் நடைபவனியில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வண்னம் சுகாதார அதிகாரிகள் பதாதைகள் ஏந்தியவாறு சென்றனர்.
இந் நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்திய பணிமனை ஊழியர்கள், லயன்ஸ் லியோ கழகத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇