மீண்டும் திறக்கப்படும் காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

24 மணி நேர மூடலுக்குப் பிறகு, காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் பொதுமக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு 10.09.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 10.09.2025 அன்று மூடப்பட்டது. 

திரிபுவன் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தின் போது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும், விமான நிலையத்திற்கு பயணிக்கும் போது அவர்களின் அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகள் மற்றும் அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்தோடு, நேபாளம் – காத்மண்டுக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ளது. 

மூடப்பட்டிருந்த அனைத்து விமான நிலையங்களையும், நேபாள சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை திறந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதற்கமைய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (11.09.2025) காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects