சுகாதார அமைச்சின் முன்பாக பல சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்க வைத்தியர்களுக்கு வழங்கப்படும் முப்பத்தைந்தாயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் அவர்கள் தற்போது தங்களது போராட்டத்தை நிறைவுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇