விலங்குகள் கடி காரணமாக வருடாந்தம் 3 லட்சம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விஷேட சமூக வைத்தியர் சமித சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
விலங்கு கடிக்கு உள்ளாகும் சிலர் அடையாளங் காணப்படாத நோய்க்கு உள்ளாகின்றனர்.
மேலும் சிலர் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, விலங்கு கடிக்கு ஆளாகுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விஷேட சமூக வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇