போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் பங்கு பற்றுதலுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 42 மாற்றுத் திறனாளிகளுக்கு 2.7 மில்லியன் பெறுமதியான சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் MJF அறக்கட்டளையினால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டது.

MJF நிறுவனமானது டில்மா தேயிலையின் விற்பனையின் மூலம் பெறப்படும் வருமானத்தினைக் கொண்டு வாழ்வாதார உதவித் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், சிறார்களின் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான செயற்திட்டங்கள், இளைஞர் யுவதிகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வாழ்வாதார தரத்தை மேம்படுத்திக் கொள்வதுடன் குடும்பத்தின் பொருளாதார தரத்தையும் மேம்படுத்த முடியும் என்றார்.

இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சத்திரகலா கோனேஸ்வரன், MJF அறக்கட்டளை நிலைய முகாமையாளர் மெஹமட் சபிக்கா, அறக்கட்டளை நிலைய வள முகாமையாளர் ஐ.பத்மபிரியன், போரதீவுப்பற்று பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் கஜேந்தி சசிதரன் மற்றும் கிராம சேவை உத்தியேகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects