பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில், வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 220 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
உள்ளூர் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலும், இந்தியன் சின்ன வெங்காயம் 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே வேளை, வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 345 ரூபாயிலிருந்து 350 ரூபா வரையிலும், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 580 ரூபாயிலிருந்து 620 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










