2025 ஆம் ஆண்டுக்கான 38 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் தியகம மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மெய்வல்லுனர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 12.10.2025 அன்று நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் மட்டக்களப்பு, களுதாவளை தேசிய பாடசாலை மாணவன் குகன் பகிர்ஜன் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் இதுவரை இருந்து வந்த பாடசாலைகள் மட்ட, உயரம் பாய்தல் சாதனையையும் முறியடித்து பகிர்ஜன் புதிய சாதனை இலக்கினை நிர்ணயித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதேவேளை, அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் குறித்த தங்கப் பதக்கத்தை கைபற்றி அவர் சாதனை படைத்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










