வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம்,மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும் , வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 16.11.2023 அன்று வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இளையோர் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய குழுவை நியமிப்பதற்கான பணிப்புரை கௌரவ ஆளுநரால் விடுக்கப்பட்டது.
அந்த வகையில் வட மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாகவும், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில், சிறந்த சமூக கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என அரச அதிகாரிகள் தெரிவித்தனர் அதன் காரணமாக விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் இடைவிலகல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், சுமார் 25 வீதமான பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவைப்படுவதாகவும் கல்வித்துறைசார் அதிகாரிகள் இதன்போது கௌரவ ஆளுநரிடம் எடுத்துக்கூறினர்.
அத்தோடு மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு அரச அதிகாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்களையும், ஏனைய உயர்மட்ட அதிகாரிகளையும் இணைத்து குழுவை நியமிக்குமாறும், இந்த குழுவின் ஆலோசனைக்கு அமைய துறைசார் குழுக்களையும், உப குழுக்களையும் நியமித்து, சமூக மட்டத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக ஆராய்ந்து, அதற்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்பிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇