இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் – சுகாதார அதிகாரிகள்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளிடையே மலேரியா நோய்த்தொற்று அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மலேரியா நோயால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்தபோது தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே இதனைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் அனைவரையும் மலேரியா பரிசோதனைக்குட்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை தற்போது இரண்டு டெங்கு வைரஸ் வகைகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்றும், நுளம்பு இனப்பெருக்க இடங்களை ஒழிக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிக முக்கியம் என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects