ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய நிர்வாகம் முடிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.சி.பி. அணியை நிர்வகித்து வருகிறது.

அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி அணியை இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.

ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கிண்ணத்தை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

இதனைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects