உத்தேச மின்சாரத் துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறைக்கான நிறுவன சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் போது சமகால சமூக – பொருளாதார மற்றும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின்சார சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
எனவே, வரைவுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇