மட்டக்களப்பில் “தமது இடம் – அழகான வாழ்க்கை “ திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கிவைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வரும் “தமது இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட 46 பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு 22.11.2025 அன்று நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் டி.பி.சரத் கலந்து கெண்டதுடன் விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, சிறப்பு அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதிநிதிகளும் மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்டத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் நேர்த்தியாக இடம் பெற்றமையினால், அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 10 இலட்சம் பெறுமதியான வீட்டை நிர்மானிப்பதற்காக 46 பயனாளிகள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டு, அதன் முதற் கட்ட கொடுப்பனவாக 150000/= பெறுமதியான காசோலைகள் பிரதியமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இவ்வாண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 582 வீடுகளை நிர்மானிக்கும் பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects